நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கழிவறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகர பெண்களுக்கு சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்றுவதற்கு நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா அமைத்தல் போன்றவற்றை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது: “சென்னை மாநகராட்சியில் உள்ள பெண் குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறை சேதம் அடைந்து முறையான பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இந்த கழிப்பறைகள் அனைத்தும் நிர்பயா நிதியின் கீழ் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல இல்லாமல் மிகவும் பாதுகாப்பான கழிவறைகளாக இவை இருக்கும். குறிப்பாக பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து கழிவறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.