Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… இனி இந்த ரேஷன் கார்டுலாம் ரத்து செய்யப்படும்…. வெளியான புதிய விதிமுறை…!!!!!!!

ரேஷன் கார்டுதாரர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரேஷன் வாங்காவிட்டால் அவர்களது ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும்  உதவுவதற்காக தேசிய பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவி போன்ற பல்வேறு உதவிகள் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்திருக்கிறது. அதாவது ரேஷன்கார்டு வைத்திருந்தும் அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமலுக்கு வந்திருக்கிறது. அதாவது தொடர்ந்து ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேல் ரேஷன் கார்டு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கார்டுதாரர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுகிறது.

அதற்கு பதிலாக தகுதியுடைய  பிறர் பயன் பெறும் வகையில் இந்த விதிமுறை வந்திருக்கிறது. மேலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை. இலவச ரேஷன் பொருட்கள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பது பற்றியும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ரேஷன் பொருட்களை தேவைப்படாத குடும்பங்களும் வெறுமனே ரேஷன்கார்டு வைத்திருக்கின்றனர்.

அதேநேரம் தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகிறது. மேலும் சிலர் ரேஷன் பொருட்களை வாங்கி அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு புதிய விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் தகுதியற்றவர்கள் பயன்பெற முடியாது என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |