தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று கூறினார். அறிவு சொத்து போல், உடல் வலிமையும் ஒரு சொத்து. விளையாட்டு, உடலை துடிப்புடன் வைத்திருக்கும். தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும் .அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூபாய் 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என பிரம்மாண்ட மைதானம் அமைக்க படும். வடசென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்து சண்டை மைதானம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
Categories