Categories
மாநில செய்திகள் வானிலை

டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்   இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி  மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் , டெல்டா  மாவட்டங்கள் ,அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் .
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு , மேகமூட்டத்துடன் காணப்படும் என  சென்னை வானிலை  ஆய்வு  மையம்  அறிவித்துள்ளது.

Categories

Tech |