சென்னை ஐஐடி வளாகத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று உறுதியான 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, 7 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்துள்ளன. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையை கண்டுபிடிக்கவும் மருத்துவ செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.