எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என்று உதயநிதி பேசியுள்ளார். இதைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
சட்டசபையில் இன்று சமூகநலத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எம்எல்ஏ உதயநிதிக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். ஏனெனில் கடந்த ஆண்டு நான் பேசும் பொழுது எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்து விட்டார் .நேற்றும் வெளியே சென்று விட்டீர்கள்.
இன்று நான் பேசும்போது உள்ளே இருக்கிறீர்கள் இதற்கு நன்றி. வெளிநடப்பு செய்தாலும் என் காரில் ஏற செல்கிறீர்கள். நீங்கள் மட்டும் இல்லை நானும் மூன்று நாட்களுக்கு முன்பு உங்கள் காரில் ஏற சென்றேன். அடுத்தமுறை தாராளமாக எனது காரில் ஏறிக் கொள்ளலாம். ஆனால் காரை எடுத்துக்கொண்டு கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று பேசினார். இதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எப்போதும் எங்கள் கார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு தான் செல்லும் என்று கூறினார்.