தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டமானது வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வைரப்பெருமாள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு சரண் விடுப்பு ஒப்புவிப்பு, நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.