Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம்” அகில இந்திய விவசாய சங்கத்தினரின் போராட்டம்….!!

வடகரை கீழ்பிடாகை  பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்த கோரி  விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிளர்கள் சங்கத்தினர் வடகரை கிளையின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில்  நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை வடகரை பேரூராட்சியிலும் விரிவுபடுத்தக்கோரி தொழிலாளர்கள் கொடியசைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் கீழ்ப்படாகை பேரூராட்சியில் மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத்தின் கிராமப்புற தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமை தாங்கியுள்ளார்.

இதற்கு தென்காசி மாவட்டத்தின் பொறுப்பாளர் பதவிலுள்ள ஷேக்மைதீன் மற்றும் அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க நிர்வாகியான தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து மாநில செயலாளர் குணசேகரன் தலைமையில்  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்க தலைவரான பாலசுப்பிரமணியன் உட்பட நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கை அடங்கிய மனுவினை வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி செயல் அலுவலரிடம் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |