நாகையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது நண்பரே அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது.
கடந்த 14ம் தேதி நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிமாறன். அவரது நண்பரான விஸ்வநாதனுடன் மணிமாறன் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை மணிமாரணின் மனைவி கண்டித்துள்ளார்.
பின்னர் விடியற்காலை எழுந்து பார்த்தபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி மணிமாறன் இறந்து கிடந்தார். இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கில் புதிய திருப்பமாக மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது நண்பன் மணிமாறனை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட தாக விசுவநாதன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.