மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5 ஜி ஸ்மார்ட்போன் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகிறது.
அதன்படி புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.
மோட்டோ G52 அம்சங்கள்:
– 6.6 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் மேக்ஸ்விஷன் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4GB / 6GB ரேம்
– 128GB மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 12 மற்றும் My UX
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 50MP பிரைமரி கேமரா, f/1.8
– 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் / டெப்த் கேமரா, f/2.2
– 2MP மேக்ரோ கேமரா, f/2.4
– 16MP செல்ஃபி கேமரா, f/2.45
– 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000mAh பேட்டரி
– டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 19,999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.