மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது.
திருச்சியில் மது போதையில் சென்ற இளைஞருக்கு சாலை போக்குவரத்தை சரி செய்யும் பணி தண்டனையாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டியதால் போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த நிலையில் சீரார் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் இரண்டு தினங்களுக்கு மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து இளைஞர் கூறுகையில், இவர்களுடன் சேர்ந்து பணியில் ஈடுபடும் போதுதான் போக்குவரத்தை சீர் செய்வது எவ்வளவு கடினம் என்பது தெரிகிறது. இனிமேல் வேகமாக வாகனத்தில் செல்லமாட்டேன் என்று தெரிவித்ததோடு, இந்த தண்டனையால் தனக்கு வருத்தம் ஏதும் இல்லை தான் செய்த தவறுக்கு நான் தான் தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.