மத்திய அரசின் சார்பில் ரேஷன் கடைகளுக்கு சுமார் 5,200 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாவட்டங்கள், மற்றும் மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 2,600 டன் மற்றும் மத்திய அரசின் சார்பில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டதுள்ளது.
இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் மூலம் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கும், தானிய கிடங்கிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.