உக்ரைன் போரை நிறுத்திக் கொள்வதற்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ரஷ்யா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் போர் குறித்து அமைதி பேச்சுவார்த்தைக்கான ரஷ்ய அரசின் கோரிக்கைகள் தொடர்பான வரைவு அறிக்கையை உக்ரைனிடம் கொடுத்திருப்பதாகவும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் மொத்தமாக விரிவு விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பியிருக்கிறோம். தற்போது இது குறித்த முடிவு உக்ரைன் அரசின் கைகளில் தான் இருக்கிறது.
அந்நாட்டின் பதிலுக்காக தான் காத்துக்கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை முன்னேறாததற்கு உக்ரைன் அரசு தான் காரணமாக இருக்கிறது. இதற்கு முன்பு செய்து கொண்ட ஒப்பந்தங்களிலிருந்து உக்ரைன் தான் விலகியது என்று கூறியுள்ளது.