தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியம் சங்கம் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் மருதமுத்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்க, மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரன், ஆளவந்தார், இளவரசன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் எனவும் வருவாய் கிராம ஊழியர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் எனவும் குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 7,250 வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினார்கள்.