இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி சில மோசடி கும்பல்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விழிப்புடன் இருக்குமாறு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், +91-8294710946 மற்றும் +91-7362951973 என்ற இரண்டு செல்போன் எண்களில் இருந்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வருவதாகவும் இதன் வாயிலாக மோசடிக் கும்பல்கள் லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொல்லி கொள்ளை அடிப்பதாகவும் எஸ்பிஐ வங்கிக்கு தகவல் வந்துள்ளது. எனவே இந்த இரண்டு எண்களிலும் இருந்தும் அழைப்பு வந்தால் வாடிக்கையாளர்கள் அதை தவிர்க்க வேண்டும் என்றும், KYC விவரங்கள் கேட்டு லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னால் அதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.