Categories
உலக செய்திகள்

பிரிட்ஜ்க்குள் இருந்த சிறுவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!!

பிலிப்பைன்சின் லெய்டு மாகாணத்தை தாக்கிய மெகி புயல் காரணமாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்துவிழுந்தது. இந்நிலையில் அங்குள்ள பேபே நகரில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டபோது அப்குதியில் வசித்து வந்த 11 வயது சிறுவனான சி.ஜே. ஜாஸ்மி குளிர்சாதன பெட்டிக்குள் சென்று ஒளிந்துகொண்டான். இதையடுத்து அங்கு நடைபெற்ற மீட்பு பணியின்போது நதிக்கரை அருகே குளிர்சாதன பெட்டியில் சிறுவன் இருப்பதை மீட்புபணி வீரர்கள் கண்டுபிடித்தனர். சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக குளிர்சாதன பெட்டிக்குள் இருந்த சிறுவன் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அப்போது சிறுவன் மீட்புபடையினரிடம் பசிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சிறுவனின் காலில் அடிபட்டிருந்தது.

அதன்பின் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது சிறுவன் பாதுகாப்பாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த நிலச்சரிவில் சிறுவனின் தாயார் மற்றும் சகோதரனை காணவில்லை. இதற்கிடையில் சிறுவனின் தந்தை நிலச்சரிவில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு பிலிப்பைன்ஸ் நிலச் சரிவால் இதுவரையிலும் 172 பேர் இறந்துள்ளனர். அத்துடன் 200 பேர் பலத்த காயமடைந்து இருக்கின்றனர். அதேபோன்று மெகி புயலால் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாகாணத்தைவிட்டு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |