Categories
உலக செய்திகள்

மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்கும் பிளான்…. திடீரென ரத்து செய்த ரஷ்ய அதிபர்…..!!!!

மரியுபோல் எஃகுஆலையைத் தாக்கும் திட்டத்தினை ரஷ்ய அதிபரான புதின் ரத்து செய்து விட்டார். ஆனால் அவற்றிற்கு பதில் முற்றுகையிட உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைனிய துறைமுக நகரமான மரியுபோலிலுள்ள அசோவ்ஸ்டல் ஆலையைத் தாக்கும் திட்டத்தை ரத்துசெய்யுமாறு ரஷ்ய ராணுவத்திற்கு அதிபர்  விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். அவற்றிற்கு பதில் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பாக முற்றுகையிடுமாறு தெரிவித்தார். அதாவது புதின், பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவுக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளார். அசோவ்ஸ்டல் ஆலையைத் தவிர்த்து அனைத்து மரியுபோல் நகரமும்  ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மரியுபோல் நகரின் முழுகட்டுப்பாட்டை பெற்றது வெற்றி என்று ரஷியஅதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரத்தில் சிக்கி இருக்கக்கூடிய போராளிகள் மற்றும் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவது தொடர்பாக விவாதிக்க ரஷ்ய அதிகாரிகளுடன் எவ்வித நிபந்தனையும் இன்றி சிறப்பு சுற்று பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உயர்மட்ட உதவியாளர்  உக்ரைன் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலிலுள்ள துருப்புக்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன் மொழிந்ததை அடுத்து ரஷ்யப்படைகள்  கோட்டையைக் கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

அதன்பின் கடைசி மணிநேரங்களில் சிக்கித் தவிப்பதாகவும், போரில் காயமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்ற உலகநாடுகள் உதவ வேண்டுமெனவும் உக்ரைன் கடற்படை தளபதிஒருவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் உக்ரைன் கடற்படை 36வது பிரிவின் தளபதி செர்ஹி வோலினா  சில நாட்களோ அல்லது மணி நேரங்களோ இருப்பதாகவும், இதுவே தங்களது வாழ்வின் இறுதியாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். தங்களைவிட எதிரிப்படைகளின் பலம் பன்மடங்கு பெரியது என தெரிவித்துள்ள அவர், வான், தரை என அனைத்து வகைகளிலும் ரஷ்யப்படைகள் ஆதிக்கம் செலுத்துவதாக கூறினார்.

Categories

Tech |