அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அதன்பிறகு தமிழகத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாநிலத் துணை தலைவர் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பினர்.