Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு…. எழுவர் விடுதலை விவகாரம்… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்…!!!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பிற்கு  எதிரானது எனவும் கூறி நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |