உக்ரைனுக்கு 100 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக நார்வே அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு மாதங்களை எட்ட இருக்கின்ற நிலையில் நார்வே அரசு உக்ரைனுக்கு ஏற்கனவே பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் தயாரிப்பான மிஸ்ட்ரல் ரக குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளை வழங்கி இருப்பதாகவும், உக்ரைனுக்கு அது பெரும் பயனளிக்கும் எனவும் நார்வே பாதுகாப்பு துறை அமைச்சர் போஜோன் அர்லிட் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நான்காயிரம் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.