பிரபல நடிகை ஒருவர் தான் வீட்டை விட்டு ஓடி வந்த கதையை கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா இயக்கத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் நடிகை ஷாலினி பாண்டே பிரபலமானார். இவர் தற்போது ஜெயேஷ்பாய் ஜோர்தாய் என்ற திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் திவ்யங் தாக்கர் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரன்வீர் சிங் மற்றும் ஷாலினி பாண்டே இருவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவின்போது நடிகர் ரன்வீர் சிங் நடிகை ஷாலினி பாண்டேவிடம் நீங்கள் வீட்டை விட்டு ஓடி வந்த கதையை கூறுங்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு ஷாலினி என்னுடைய பெற்றோர் நான் எஞ்சினியரிங் படிக்க வேண்டும் என விரும்பினர். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் நடிகையாக வேண்டும் என்று என்னுடைய பெற்றோர்களிடம் பலமுறை கூறி 4 வருடங்களாக அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் நான் வீட்டை விட்டு ஓட முடிவு செய்தேன். இது ஜோக் மாதிரி தெரிகிறது. ஆனால் அப்பொழுது அது மிகவும் கடினமாக இருந்தது. இப்பொழுது என்னுடைய பெற்றோர் என்னை நினைத்து மிகவும் பெருமை படுகிறார்கள். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் எனக் கூறினார்.