இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எங்கும் எதுவும் செய்ய முடியாது, அரசு நலத்திட்ட உதவிகள், ரேஷன் என எதுவுமே கிடைக்காது. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால், நீங்கள் அதை புதுப்பிக்க விரும்பினால் என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
ஆதார் அட்டை வழங்கும் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI https://uidai.gov.in/ஐ கிளிக் செய்யவும். இந்த இணையதளத்தில் கிளிக் செய்தவுடன், ஆதார் சேவை பிரிவு அப்டேட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதாரின் 12 இலக்க தனிப்பட்ட எண் கேட்கப்படும். அதை நிரப்பவும், அடுத்து நீங்கள் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். அடுத்து உங்களிடம் சில விவரங்கள் கேட்கப்படும். உடனடியாக அவற்றை நிரப்பவும். அதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும், அதை நிரப்ப வேண்டும். அடுத்த அப்டேட் டேட்டா பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் தங்கள் மொழியை தேர்வு செய்து தொடர்ந்து தங்களின் புதுப்பித்தல் பணியை ஆரம்பிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.