முதலிரவு பயம் காரணமாக புதுமாப்பிள்ளை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் உள்ள மச்சர்லா சாகர் ரிங்ரோட்டைச் சேர்ந்த கிரண்குமார் (32) என்பவருக்கும், குண்டூர் மாவட்டம் தென்னாலியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 16ம் தேதி முதல் இரவு மற்றும் திருமணத்தை கொண்டாட பெரியவர்கள் முடிவு செய்தனர். கடந்த 12ம் தேதி மணமக்கள் குண்டூர் செல்ல தயாராகினர். கிரண்குமார் குண்டூரை அடைந்ததும், உடன் வந்தவர்களிடம் இப்போது வருகிறேன் என்று கூறிவிட்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் கிரணை காணாததால், அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். புதுப்பெண் மற்றும் உறவினர்கள் தென்னாலியை அடைந்தனர். மேலும் அந்த இளைஞனை காணவில்லை என போலீசாருக்கு அறிவித்துள்ளார். கிருஷ்ணா நதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தாடேபள்ளி போலீசார் தெரிவித்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்தது. கிரணின் பெற்றோர் உடலை அடையாளம் காண வந்தனர். முதலிரவில் மகன் பயந்துவிட்டதாகவும், நண்பர்கள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் தாய் போலீசாரிடம் கூறியுள்ளார். தாடேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.