மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும்.
லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம் சரியாகும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகக்கூடும். காரிய வெற்றி மற்றும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறையும். கடன் பாக்கிகள் வசூலாகி மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
திட்டமிட்டு புத்திக்கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வீர்கள். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அன்பு உண்டாகும். தெய்வத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கை ஏற்படும். இன்று உங்களுக்கு வாழ்க்கை முன்னேற்றகரமாக அமையும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு செயலையும் மேற்கொள்ளுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.