Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி…!!!

தீவிர வாகன சோதனையின் போது அதிகாரிகளால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழித்துறை பகுதியில் தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இவர்களைப் பார்த்தவுடன் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன்பிறகு அதிகாரிகள் காரை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் ஒரு டன் அரிசி இருந்துள்ளது. மேலும் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |