Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL: கடைசி ஓவரில் தெறிக்க விட்ட தோனி….. CSK அசத்தல் வெற்றி….!!!!!

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.

அடுத்தடுத்து வந்தவர்கள் அவுட் ஆனதால் மும்பை அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறியது. பின்னர் சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சாண்ட்னர் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரின் முதல் பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கத்துக்கு மாறாக மும்பையின் பவுலிங் ஸ்பெல்லை தொடங்கிய டேனியல் சாம்ஸ் ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் ஆனார். மிட்சல் சான்ட்னர் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இரண்டு பவுண்டர்களை விளாசி சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அதை நீடிக்கத் தவறினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் சாம்ஸ் பந்தில் அவுட் ஆக, அம்பதி ராயுடுவுடன் கூட்டணி அமைத்தார் ராபின் உத்தப்பா. இருவரும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினர்.

30 ரன்கள் எடுத்திருந்த ராபின் உத்தப்பா விக்கெட்டை உனட்கட் வீழ்த்த, அடுத்து வந்த கேப்டன் ஜடேஜா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். துபே 13 ரன்களும், ஜடேஜா மூன்று ரன்களும் எடுத்தனர். சிறிதுநேரத்தில் பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடுவும் 40 ரன்களுக்கு நடையைக்கட்டினார். மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் சரிவால் சென்னை அணி தடுமாறியது. ஒருகட்டத்தில் 12 பந்துகளில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

பும்ரா ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் சேர்த்து 11 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இறுதிஓவரை உனட்கட் வீசினார். முதல் பந்தே டுவைன் பிரிட்டோரியஸை அவுட் ஆக்கினார். மூன்றாவது பந்தில் சிக்ஸும், நான்காவது பந்தில் பவுண்டரியும் அடித்த தோனி, ஒரு பந்தில் 4 ரன்கள் என்ற தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து மீண்டும் சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்தார். இதனால் கடைசி பந்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Categories

Tech |