அனைத்து கால வரம்புகளுக்கான கடன் வழங்குவதற்கான இறுதிநிலை செலவு (எம்சிஎல்ஆர்) விகிதத்தை இந்தியாவின் முன்னணி வங்கிகள் 10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வங்கியில் கடன் பெறுபவர்கள் இனி வரும் மாதங்களில் மாதம்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணம் உயரக்கூடும்.
பேங்க் ஆஃப் பரோடா :-
ஏப்ரல் 12 முதல் பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் (BoB) 0.05 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் முன்பை விட வாடிக்கையாளர் வாங்கிய கடனின் EMI அதிகரிக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா :-
MCLR கட்டணத்தை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் (எஸ்பிஐ) 10 அடிப்படை புள்ளிகள் (0.10 சதவீதம்) உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக இனி அனைத்து வகையான கடன்களுக்கான EMI தொகையும் SBI வங்கியில் உயரக்கூடும்.
கோடக் மஹிந்திரா வங்கி :-
MSLR கட்டணத்தை உயர்த்தி கோடக் மஹிந்திரா வங்கியும் தனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 16 முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி :-
தனது வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கியும் உயர்த்தியுள்ளது. 0.05 சதவீதம் MCLR கட்டணம் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது.