Categories
தேசிய செய்திகள்

கற்பனையை நிஜம் என எண்ணி….. கணவன் செய்த பயங்கரம்…. வெளியான பகீர் பின்னணி…!!!!

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள அனேக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மல்லேஷ் (35). இவர் அதே பகுதியில் துணிகளை சலவை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சரஸ்வதி (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலாகவே மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி மல்லேஷ் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் அவரது மனைவி அவ்வப்போது தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். பின்னர், மல்லேஷும், அவரது உறவினர்களும் சென்று சரஸ்வதியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் மல்லேஷ் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு அனேக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது தம்பியுடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் சேர்த்து தன்னை கொல்ல திட்டம் தீட்டியதால் தனது மனைவியை கொலை செய்ததாகவும் மல்லேஷ் கூறினார்.

இதனிடையே, மல்லேஷின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அவரை மனநல மருத்துவரிடம் போலீஸார் அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ‘ஷீசோஃபெர்னியா’ என்ற விசித்திர மனநோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். ‘ஷீசோஃபெர்னியா’ என்பது கற்பனை உலகில் வாழும் ஒருவித மனநோய் ஆகும். இந்த மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்பனை உலகையும், நிஜ உலகையும் பிரித்து பார்க்க தெரியாது.

உதாரணமாக இந்த மனநோய்க்கு உள்ளான ஒருவர், தன்னை தனது நண்பர் கொலை செய்ய திட்டமிடுவதாக கற்பனை செய்துவிட்டால், நிஜமாகவே அவரை சந்தேகப்பட தொடங்கி விடுவார். அவரிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அவர் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, மல்லேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்படி, தற்போது அவரை மனநல சிகிச்சைக்கு அழைத்து செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |