சென்னையில் ஏற்கெனவே 3 தாஜ் ஹோட்டல்கள் உள்ள நிலையில், நான்காவது தாஜ் ஹோட்டல் அமைப்பதற்கு இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனமானது முடிவு செய்துள்ளது.
பிரபல தாஜ் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனம் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி ஆகும். இந்நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு ஹோட்டல்கள் உள்ளன. மேலும் சென்னையில் ஏற்கெனவே 3 தாஜ் ஹோட்டல்கள் உள்ள நிலையில், நான்காவது தாஜ் ஹோட்டல் அமைப்பதற்கு இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனமானது முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த புதிய தாஜ் ஹோட்டலையும் சேர்த்தால் சென்னையில் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக 13 ஹோட்டல்கள் உள்ளன.
இதையடுத்து திட்டமிடப்பட்டுள்ள இப்புதிய தாஜ் ஹோட்டல், சென்னையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில், 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கிறது. மேலும் இந்த ஹோட்டலில் நான்கு உணவகங்கள், ஒரு பார், 235 அறைகள் மற்றும் 123 தாஜ் பிராண்டட் சொகுசு அறைகள் அமைக்க பட உள்ளன. அதுமட்டுமல்லாமல் மீட்டிங் நடத்துவதற்கான இடங்கள், தொழில் மற்றும் சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கான இடங்களும் அமைக்கப்பட உள்ளது. மேலும் நீச்சல் குளம், ஃபிட்னஸ் சென்டர் மற்றும் ஸ்பா உள்ளிட்ட வசதிகளும் இந்த ஹோட்டலில் அமைக்கப்பட இருக்கின்றன.
இதனை தொடர்ந்து இப்புதிய ஹோட்டலில் அமைய உள்ள ஸ்பெஷல் பிராண்டட் அறைகளில் தங்குவோர் தாஜ் சேவைகள் மற்றும் ஹோட்டல் வசதிகள் ஆகிய இரண்டையும் பயன்படுத்த முடியும். இந்நிலையில் சென்னையில் 4-வது தாஜ் ஹோட்டலை அமைப்பது பற்றி அறிவிப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி நிறுவனத்தின் தலைமை அதிகாரியான புனீத் சத்வால் தெரிவித்துள்ளார்.