Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் …. கடித்து குதறும் வெறிநாய்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதங்குடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வதற்காக வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வயலுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள்  தொடர்ந்து கடித்து வருகிறது.

அதேபோல் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஏராளமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது . மேலும்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  60 ஆடுகள்  வெறி நாய்கள் கடித்து உயிரிழந்துள்ளது. எனவே  உடனடியாக அதிகாரிகள்  வெறி நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |