பாகிஸ்தானிலுள்ள கிராம பகுதியிலிருக்கும் குடிசைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
பாகிஸ்தானிலுள்ள சிந்து மாநிலத்தில் பைஸ் முஹம்மது என்ற கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியிலுள்ள ஒரு குடிசை வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த வீடுகளுக்கு மளமளவென பரவியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
அதுமட்டுமின்றி 20 க்கும் மேலானோர் பலத்த தீக்காயமடைந்துள்ளார்கள். மேலும் ஆடுகள், மாடுகள் உட்பட பல கால்நடைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதற்கு சிந்து மாநிலத்தின் முதல் மந்திரியான முராத் அலி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு மட்டுமின்றி விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.