சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார வசதியின்மையால் கல்வியைத் தொடர முடியாமல் போகும் சிறுபான்மையின மாணவிகளுக்கான பிரத்தியேகமான உதவி தொகை இதுவாகும். பத்தாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
வருமானச் சான்றிதழ், ஓய்வூதிய ஆணை, ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் செய்திருக்க வேண்டும். அதனை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு https://www.maef.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.