Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈகோ பார்க்கும் ஆண்களே காரணம்…. பொங்கியெழுந்த குஷ்பூ…. என்ன காரணம்?….!!!!

பல இடங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க ஈகோ பார்க்கும் ஆண்களே காரணம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை குஷ்பூ. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அதுவும் இவருக்காக தான். அந்த அளவிற்கு பேரன்பு கொண்ட ரசிகர்களை பெற்று முன்னணியில் இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இன்றைய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் வெற்றியை சீக்கிரமே எதிர்பார்க்கிறார்கள்.

கொஞ்சம் பொறுமை, பொறுப்பு மற்றும் தைரியம் எல்லாமே இருந்தால் மட்டும் தான் சாதிக்க முடியும். பல இடங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க ஈகோ பார்க்கும் ஆண்களே காரணமாக இருக்கின்றனர். அதனைப் போல வீட்டில் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை சகித்துக்கொண்டு அது பற்றி வெளியில் பேசாமல் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சனைகளை கண்டு தயக்கம் மற்றும் பயம் கொள்ளாமல் தைரியமாக குரல் உயர்த்தி பேசுவதால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |