கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவாழ்வு நகரில் சக்திவேல்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சரஸ்வதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.