Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு…. சசிகலாவிடம் இன்று மீண்டும் விசாரணை….!!!!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து நேற்று சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் காணாமல் போன நிற பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. சசிகலாவிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெறுகிறது. நேற்று 200 கேள்விகள் வரை கேட்கப்பட்ட நிலையில் இன்றும் தனிப்படை விசாரிக்க உள்ளது.

Categories

Tech |