Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கும் மாத உதவித்தொகை….. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. அமைச்சர் வெளியிட்ட தகவல்……!!!!!!

ஆதரவற்றவா்களாக கருதி 18 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையா்களுக்கும் மாத உதவித்தொகை வழங்க அரசு பரிசீலிக்கும் என சமூகநலத்துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமூகநலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது ” 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையா்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நான் அறிந்தவவரை தான் ஒரு திருநங்கை/திருநம்பி என்ற தன் மன உணா்வை வீட்டில் வெளிப்படுத்திய நாள் முதல் அவா்கள் ஆதரவற்றவா்களாகி விடுகின்றனா். ஆகவே 18 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையா் அனைவரையும் ஆதரவற்றவா்கள் என கருதி அவா்களுக்கு மாத உதவித்தொகையை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு அமைச்சா் கீதா ஜீவன் விளக்கம் அளித்தபோது “பள்ளி, கல்லூரிகளிலேயே தாங்கள் திருநங்கையா்களாக உணரத் தொடங்குகின்றனா். அதற்கேற்றவாறு பள்ளி, கல்லூரிகளிலேயே கவுன்சிலிங் தொடங்க வேண்டும் என உறுப்பினா் கூறினாா். எனவே அதை அரசு செயல்படுத்தும். மேலும் திருநங்கைகளுக்காக வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும். அத்துடன் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து திருநங்கையா்களுக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா். அது குறித்து அரசு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றாா்.

Categories

Tech |