தடுப்புச்சுவர் மீது பேருந்து மோதிய விபத்தில் 13 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுகரியாபட்டி பிரிவு சாலையில் திருச்சியில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 13 பயணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான நடராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்.