Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு குடிநீர் வேண்டும்” அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!!

அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே காத்துக்குளி‌ கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மின்மோட்டார் மூலம் 2 கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் மின்மோட்டார் அடிக்கடி பழுதடைவதால் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக கிராம மக்கள் கோத்தகிரியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அதன்பின் திடீரென அலுவலகத்தை  முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உங்கள் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |