இம்ரான்கான் நேற்று முன்தினம் தனது இணையதள பக்கத்தில் தனது ஆட்சி கவிழ ராணுவ தளபதிகள் தான் காரணம் என்று மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் இதுவரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக எந்த பிரதமரும் தனது ஆட்சியை நடத்த வில்லை. அந்த வகையில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் தனது 5 ஆண்டுகால ஆட்சியை தொடர முடியாமல் போன நிலையில் அவருக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா சதி செய்து வருவதாக மறைமுகமாக குற்றம் சாடி வந்த இம்ரான்கான் தற்போது திடீரென நேற்று முன்தினம் தனது இணையதள பக்கம் மூலமாக தனது கட்சி உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெளியிட்ட பதிவில் ஆட்சி கவிழ்ப்பதற்கு ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக காரணம் காட்டி சாடி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் தலைவர் நியமனத்துக்கு முதலில் ஒப்புதல் அளிக்க மறுத்து பிறகுதான் ஒத்துக்கொண்டார். அப்போது இருந்தே இம்ரான்கான் ராணுவத்தின் ஆதரவை இழந்து விட்டதாக பாகிஸ்தான் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.