Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்பலமூலா அருகே மணல்கொல்லி கிராமத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் ரவீந்திரன் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது 10,500 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அம்பலமூலா காவல்நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |