தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும்விதமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை உள்பட மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான காளைகளும், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு களமாடினர்.
போட்டியின்போது, காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்குப் போட்டி வளாகத்தில் அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை மையத்தில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர்கள் தங்கக் காசு, பீரோ, கட்டில், பாத்திரங்கள், சைக்கிள் போன்ற பரிசுப் பொருள்களை வழங்கினர்.