Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினர் விசாரணை….!!!

தேயிலை தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே பேரகனி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஒரு சிறுத்தை அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து கட்டப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டு உடல் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் சிறுத்தைக்கு சுமார் 8 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருப்பதால் இறந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை எனவும் கூறினர். மேலும் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு சிறுத்தை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |