Categories
சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனனுக்கு கிடைத்த பாராட்டு…. பா.ம.க தலைவர் சொன்ன அட்வைஸ்…..!!!!!

தெலுங்கு திரைஉலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், அண்மையில் நடித்த புஷ்பா படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வசூலை ஈட்டியது. இதற்கிடையில் அல்லு அர்ஜுனிடம், முன்னனி புகையிலை நிறுவனம் அவர்களது விளம்பரபடத்தில் நடிக்க அழைத்து உள்ளனர். இதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் வரையிலும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். எனினும் புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க அவர் விரும்பவில்லை எனவும் அந்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் இச்செயலை பாராட்டி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருடைய சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதாவது அவர் குறிப்பிட்டிருப்பதாவது “ஒரு புகையிலை நிறுவனம் விளம்பரத்தில் நடிப்பதற்கு பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக்கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் அல்லுஅர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். அவ்வாறு புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் வாயிலாக உந்தப்பட்டு தம் ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக்கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அவருடைய சமூகஅக்கறை பாராட்டத்தக்கது ஆகும். நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதனைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்மாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன். தற்போது புகையிலை விளம்பரத்திற்குமறுப்பு தெரிவித்த அல்லுஅர்ஜுன் படங்களிலும் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அனைத்து நடிகர்களுமே அவர்களின் ரசிகர்கள் உட்பட மக்கள் நலனை கருத்தில் கொண்டு புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |