அடுத்த கல்வியாண்டு குறித்த அறிவிப்பை கர்நாடக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவிவருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை ஜூன் மாதத்தில் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பியூசி பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் இன்று பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கி இருக்கின்றது. மேலும் கொரோனா காரணமாக குறைவான நாட்களே நேரடி பகுப்பு நடைபெற்றதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு குறித்த அறிவிப்பை கர்நாடக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பில் கூறியதாவது, கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் இந்த ஆண்டு 15 நாட்கள் முன் கூடிய பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அதாவது 2022 – 23 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு மே மாதம் 16ம் தேதி அன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதல் பருவம் வகுப்புகள் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெறும் எனவும், இரண்டாம் பருவ தேர்வு அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப் பட்டிருக்கிறது.