இத்தாலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகள் திருமண அரங்கிற்குள் நுழைந்த விதம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. இதில் மணப்பெண் சுமார் 250 ஹீலியம் பலூன்களை தனது உடலுடன் சேர்த்து கட்டிக் கொண்டு வானில் மிதந்தவாறு மணமேடைக்கு வந்தார்.
இந்த வீடியோ சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வெள்ளைநிற ஹீலியம் பலூன்களை கட்டிக் கொண்டு பறந்து வருவது போன்று அமைந்துள்ளது. இது பார்ப்பவர்களின் கண்களை கவர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் கலக்கி வரும் ஒரு ட்ரெண்டிங்கான வீடியோவாக உள்ளது.