Categories
தேசிய செய்திகள்

“காந்தி நினைவு இடம்”…. அஞ்சலி செலுத்திய இங்கிலாந்து பிரதமர்…. பின் நடந்த சம்பவம்….!!!!!!

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதையடுத்து முதல் நாள் பயணமாக குஜராத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்பின் காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். ஆமதாபாதிலுள்ள அதானி குழும அலுவலகத்தில் தொழில் அதிபர் கவுதம் அதானியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு ஆகியவற்றில் அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று முதல் நிகழ்ச்சியாக டெல்லி, ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அஞ்சலி செலுத்தினார். அங்கு உள்ள பார்வையாளர் புத்தகத்தில் காந்தியை பாராட்டி எழுதினார். அப்போது இங்கிலாந்து பிரதமருக்கு மார்பளவு காந்திசிலை பரிசாக வழங்கப்பட்டது.

Categories

Tech |