Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களின் ஆபாச புகைப்படம்…. சமூக வலைதளத்தில் பரப்பிய உறவினர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்களின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஓட்டேரி காவல் நிலையத்தில் கிருஷ்ணா மீது புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாங்கள் வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தோம். அப்போது ஆடை லேசாக விலகிய நிலையில் இருக்கும் போது எங்களுக்கு தெரியாமல் உறவினரான கிருஷ்ணா செல்போனில் அதனை படம் பிடித்துள்ளார்.

அதன்பின் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கிருஷ்ணா அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |