Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உதவிக்கு அழைத்த சிறுவன்…. பரிதாபமாக இறந்த தாய்-மகன்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்வாஜ் என்ற கணவர் உள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லதா விவாகரத்து பெற்று தனது மகன் தவஜ் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இதில் தவஜ் அம்பத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லேசாக மயங்கிய நிலையில் இருந்த தவஜ் எதிர் வீட்டில் வசிக்கும் நவநீதம் என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து நவநீதம் லதாவின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை எடுத்து மயங்கி விழுந்த தவஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தவஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதற்கிடையே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பொருளாதார வசதியின்றி தவித்த தவஜ் தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அதனை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |