தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் நிலக்கரி தட்டுப்பாட்டை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 72 ஆயிரம் மெகா டன் நிலக்கரி தேவை உள்ள நிலையில் 50 ஆயிரம் மெகா டன் நிலக்கரி மட்டுமே வரத்து வந்துள்ளது. எனவே 72 ஆயிரம் மெகாவாட்டை நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். இந்த நடவடிக்கையால் மட்டுமே தமிழ்நாட்டில் தடையில்லா மின் வினியோகத்தை பராமரிக்க முடியும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.