Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மின்தடை…. அலட்சியமாக பதிலளித்த ஊழியர்…. சமூக வலைதளங்களில் வைரல்…!!!

மின்வாரிய ஊழியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின் தடை காரணமாக களியக்காவிளை பகுதியில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு ஒருவர் மின் தடை குறித்து விசாரிப்பதற்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பை ரவி என்பவர் எடுத்து பேசியுள்ளார்.

இவரிடம் ஒருவர் மின் தடை குறித்து கேட்டுள்ளார். அதற்கு ரவி மிகவும் அலட்சியமான முறையில் பதில் அளித்துள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் காரணமாக ரவியை அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |